2வது டி20 : வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா!

வங்காளதேச அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி தொடரை கைப்பற்றியது.

ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை வங்கதேசம் 2-1 என கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. மேட் ரென்ஷா அதிரடியாக ஆடி 52 பந்தில் 5 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 89 ரன்கள் குவித்தார். டிம் டேவிட் 26 பந்தில் 45 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளாதேசம் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.