அரசு பேருந்தில் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் முன்பதிவு பயணம் செய்பவர்களுக்கு 6வது பயணம் முதல் 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது.
தொடர்ந்து ஒவ்வொரு துறைவாரியான மானிய கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இன்று போக்குவரத்து மீதான மானிய கோரிக்கை விவாதத்திற்கு அமைச்சர் சிவசங்கர் பதிலளித்து பேசினார்.






