கூட்ட நெரிச்சலைப் பயன்படுத்தி நூதன திருட்டு- பெண்ணைக் கையும் களவுமாகப் பிடித்தக் காவல்துறை

திருச்சி சமயபுரம் கோவிலில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பக்தர்களிடம் நகையை நூதனமாக திருடிய பெண்ணைக் காவல்துறையினர் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். திருச்சி சமயபுரம் கோயில் பகுதியில் ஏற்பட்டக் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி…

திருச்சி சமயபுரம் கோவிலில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பக்தர்களிடம் நகையை நூதனமாக திருடிய பெண்ணைக் காவல்துறையினர் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.

திருச்சி சமயபுரம் கோயில் பகுதியில் ஏற்பட்டக் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருச்சி மருதண்டாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சரஸ்வதி கழுத்தில் இருந்த 7 பவுன் தாலி செயினை பறித்த திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த ரேகா என்கிற பெண்ணை சமயபுரம் போலீசார் கைது செய்தனர்.

ரேகாவை விசாரணை செய்தபோது லால்குடி, மண்ணச்சநல்லூர், சமயபுரம் உள்ளிட்ட
பகுதிகளில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பெண்கள் அணிந்திருந்த நகைகளை
கொள்ளையடித்து வந்தது தெரிய வந்தது.

கைதான ரேகாவிடம் இருந்து 67 பவுன் நகைகளை சமயபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கருணாகரன் பறிமுதல் செய்தார்.  ரேகா கூட்டநெரிசலைப் பயன்படுத்தி திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள கோவில்களில் 67பவுன் நகையைத் திருடி வைத்திருந்தது அம்பலமானது.

-ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.