பிரசித்தி பெற்ற தென்காசி விஸ்வநாதர் ஆலயத்தில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்திப் பெற்றத் தென்காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வெகுச் சிறப்பாக நடைபெற்றப் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் ஏராளமானப் பக்தர்கள் பங்கேற்றுச் சுவாமித் தரிசனம் செய்தனர்.
தென்காசி மாவட்டம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மாசி மகப் பெருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் அளித்து, சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சப்பர வீதி உலாவும் நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : வதந்தியால் சொந்த ஊர் திரும்பும் வடமாநில தொழிலாளர்கள் – விழிப்புணர்வு ஏற்படுத்த தொழிலதிபர்கள் கோரிக்கை
இதன் பின்னா் , 7-ம் திருநாளை முன்னிட்டு நடராஜப் பெருமாள் எழுந்தருளி தாண்டவ தீபாதாரணையும், பஞ்சமூர்த்தி புறப்பாடும் நடைபெற்றது. இதில், மிகச் சிறப்பாக நடைபெற்றப் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியைக் காண ஏராளமானப் பக்தர்கள் வருகைத் தந்துச் சுவாமித் தரிசனம் செய்துவிட்டுச் சென்றனர்.
–கே.ரூபி







