தமிழகம் செய்திகள்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் பிரதோசம் – 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோசம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் செல்ல கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களைக் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம்  கோவில், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலானது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதி  வழங்கப்படும். இந்நிலையில் மாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு மார்ச் மாதம் 4ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த அனுமதி, காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே  வழங்கப்பட்டுள்ளது.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால், சதுரகிரி கோவில் மலைக்குச் செல்லும் பக்தர்கள் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ரயில் பாதை பராமரிப்பு-மதுரை கோட்டத்தில் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

Web Editor

நடிகர் ரஜினி – தமிழக ஆளுநர் ரவி சந்திப்பு குறித்து கேள்வி-தமிழிசை செளந்தரராஜன் பதில்

Web Editor

வாணி ஜெயராம் மறைவு; ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி

Jayasheeba