பாமக தேர்தல் அறிக்கை வரும் 5ஆம் தேதி வெளயீடு?

சட்டப்பேரவை தேர்தலுக்கான பாமகவின் தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் வருகிற 5ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாமகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்…

சட்டப்பேரவை தேர்தலுக்கான பாமகவின் தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் வருகிற 5ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாமகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர், தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து பத்திரிகையாளர்களுக்கு விளக்கம் அளிக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.