டெல்லியில் நடைபெற்ற மாநகராட்சி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி நான்கு இடங்களிலும் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளது. இடைத்தேர்தல் நடைபெற்ற ஐந்து தொகுதியிலும் பாஜக படுத்தோல்வியை சந்தித்து உள்ளது.
டெல்லி மாநகராட்சியில் உள்ள ரோஹினி -சி, ஷாலிமார் பாக் , திரிலோக்புரி, கல்யாணபுரி, சவுகான் பேங்கர் ஆகிய ஐந்து வார்டுகளுக்கு கடந்த பிப்ரவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஷாலிமார் பாக் தொகுதி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. திரிலோக்புரி மற்றும் கல்யாண்புரி ஆகியவை தனித் தொகுதிகளாகும்.
இத்தேர்தலில் 50.86 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. ஆரம்பம் முதலே கல்யாணபுரி, ரோஹினி -சி, திரிலோக்புரி மற்றும் ஷாலிமார் பாக் ஆகிய நான்கு வார்டுகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வந்தது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சவுஹான் பாங்கார் வார்டில் முன்னிலை வகித்து வந்தார்.
இந்த ஐந்த தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே ஆம் அத்மி மற்றும் சவுஹான் பாங்கார் வார்டில் காங்கிரஸ் முன்னிலை வகிந்த நிலையில் அனைவரும் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து மணீஷ் சிசோடியா கூறுகையில் “டெல்லி மக்கள் பாஜக மீது நம்பிக்கை இழந்துவிட்டதையே இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. 2022 டெல்லி தேர்தலில் பாஜகவுக்கு ஒரு இடங்கள் கூட கிடைக்காது” எனத் தெரிவித்தார்.







