சென்னை துறைமுகம் தொகுதியின் பாஜக வேட்பாளர் வினோஜ்.பி.செல்வத்தை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தேசிய கட்சிகளின் தலைவர்களும் தமிழகத்திற்கு வந்து தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தமிழகம் வந்திருக்கும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா சென்னை துறைமுகம் தொகுதியில் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வத்தை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.
சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய ஜே.பி.நட்டாவுக்கு வழி நெடுகிலும் பாஜகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.







