அதிமுக ஆட்சியில் இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கில் சிறந்த மாநிலமாக தமிழகம் உருவாக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரில், கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.
பட்டாசு தீப்பெட்டி தொழில் பாதுகாக்கப்படும் என்றும் பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்றும் அப்போது முதலமைச்சர் பழனிசாமி உறுதியளித்தார்.
அதிமுக இந்த தேர்தலோடு காணாமல் போகும் என திமுகவினர் கூறுவதை கண்டித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை வீழ்த்த யாரும் பிறக்கவில்லை இனிமேலும் எவரும் பிறக்க போவதில்லை என கூறினார்.







