அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரும், மாநகர் மாவட்ட கழக செயலாளர் வெங்கடாசலம் போட்டியிடுகிறார். இன்று சேலம் 4 ரோடு,பெரம்பனூர், கோவிந்த தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஏராளமான பெண்கள் அவருக்கு மலர்கள் தூவியும் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
”அதிமுக தேர்தல் அறிக்கை பெண்களின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுகவின் தேர்தல் அறிக்கையால் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதிமுக அரசு சொன்னதைச் செய்யும் சொல்லாததையும் செய்துள்ளது. மக்கள் மத்தியில் அதிமுக மிகப்பெரிய அளவில் எழுச்சி பெற்றுள்ளது. அடுத்து தமிழகத்தில் அதிமுக ஆட்சி மலரப் போகிறது. மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பொறுப்பேற்று பல்வேறு மக்கள் பயன்பெறும் திட்டங்களை நிறைவேற்றுவார்” என்று அவர் கூறினார்.







