சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சர் ஜோசப் விஜய்யை பாமக தலைவர் அன்புமணி சந்தித்தார். அப்போது, சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் பாமக நடத்திய அனைத்துக்கட்சி தீர்மானத்தை முதலமைச்சர் விஜய்யிடன் பாமக தலைவர் அன்புமணி வழங்கினார்.
தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்கவும், ஒட்டுமொத்த சமூக மேம்பாட்டிற்காகவும் தமிழக அரசே சாதிவாரி கணக்கெடுப்பை (சமூகநீதி சர்வே) உடனடியாக நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.




