ஹோட்டல் உரிமையாளரை பீர் பாட்டிலால் கொடூரமாக தாக்கிய பாமக நிர்வாகி – போலீஸ் வலைவீச்சு

ஓமலூர் அருகே மது அருந்த அனுமதிக்காக தாபா ஹோட்டல் உரிமையாளரை பீர்பாட்டிலால் தாக்கிய பாமக நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே கோனேரி வளவு பகுதியில் சந்திரசேகரன் என்பவர் தாபா…

ஓமலூர் அருகே மது அருந்த அனுமதிக்காக தாபா ஹோட்டல் உரிமையாளரை பீர்பாட்டிலால் தாக்கிய பாமக நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே கோனேரி வளவு பகுதியில் சந்திரசேகரன் என்பவர் தாபா ஹோட்டலை நடத்தி வருகிறார். இவரது ஹோட்டலுக்கு நண்பர்களுடன் வந்த தாரமங்கலம் பாமக நகர செயலாளர் சக்தி மது அருந்த வேண்டும் என கேட்டுள்ளனர். இங்கு மது அருந்த அனுமதி இல்லை என்று கூறியதால் இருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற சக்தி மீண்டும் தனது சகோதரர்களுடன் வந்து தகராறில் ஈடுபட்டு அவர்கள், சந்திரசேகரனின் தலையில் பலமாக பீர்பாட்டிலால் தாக்கியுள்ளார்.

இவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தபோது சக்தி உறவினர்களுடன் தப்பி சென்றுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. படுகாயமடைந்த சந்திரசேகர் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இது தொடர்பான புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக சக்தி மற்றும் அவரது 2 சகோதரர்களை தேடி வருகின்றனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.