சென்னை அம்பத்தூரில் அதிவேகமாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.
சென்னை அம்பத்தூரை அடுத்த புதூர் மார்க்கெட் அருகில் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனத்தின் மீது அதிவேகத்தில் சென்ற கார் மோதிவிட்டு சென்றது. சீரில்லாமல் சென்ற கார் மின்கம்பத்தின் மீது மோதி நின்றது.
ஆட்டோவில் இருந்த முகமது சுனில் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மற்றும் கண்ணதாசன் என்பவர் படுகாயங்களுடன் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் காரை ஓட்டி வந்த ஜார்ஜ் மில்லர் என்பவர் தப்பிக்க முயன்றபோது சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் அவரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விபத்தை ஏற்படுத்தி தப்பிக்க முற்பட்ட நபரை பொதுமக்கள் தாக்கும் போது அதை தடுக்க வந்த ஆய்வாளர் வள்ளியிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த விபத்து குடிபோதையின் காரணமாக நடந்தா? அல்லது எதிர்பாராமல் நடந்தா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
– அறிவுச்செல்வன்