இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த விவாகரத்தில் பரங்கிமலை சதீஷை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பரங்கிமலை காவல் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவி சத்யபிரியாவும், அதே குடியிருப்பில் வசித்த சதீஷ் காதலித்த நிலையில், சத்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தால் சதீசுடன் பேசுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் கடந்த ஆண்டு கல்லூரி மாணவி சத்யபிரியாவை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்தார். இந்த வழக்கில் கைதான சதீஷ் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
சிபிசிஐடி பரிந்துரையின்பேரில் சதீஷை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சதீஷ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், கைது செய்யப்பட்ட தேதி தொடர்பான குறிப்பாணையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள தகவலில் முரண்பாடு உள்ளது என தெரிவிக்கப்பட்டது. முரண்பாடு குறித்து காவல்துறை போதிய விளக்கம் அளிக்காததால் குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- பி.ஜேம்ஸ் லிசா







