பேக்கரியில் தீ விபத்து – பல லட்ச ரூபாய் உணவு பொருட்கள் தீயில் கருகி நாசம்!

காரைக்குடியில் பேக்கரியில் ஏற்பட்ட  தீ விபத்தில் பல லட்ச ரூபாய்  மதிப்புள்ள உணவு பொருட்கள் தீயில் கருகி நாசமானது. சிவகங்கை, காரைக்குடி கழனிவாசல் பகுதியில் சகுந்தலா தேவி என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். இந்நிலையில்,…

காரைக்குடியில் பேக்கரியில் ஏற்பட்ட  தீ விபத்தில் பல லட்ச ரூபாய்  மதிப்புள்ள உணவு பொருட்கள் தீயில் கருகி நாசமானது.

சிவகங்கை, காரைக்குடி கழனிவாசல் பகுதியில் சகுந்தலா தேவி என்பவர்
பேக்கரி நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று அதிகாலை உணவுப் பொருள் தயாரிப்பதற்காக பேக்கரி ஊழியர் நெருப்பு பற்ற வைக்க முயன்றுள்ளார்.

அப்போது திடீரென எதிர்பாராத விதமாக எண்ணெய் வைத்திருந்த சட்டி வெடித்து தீ
விபத்து ஏற்பட்டது. மள,மளவென தீ பரவி பேக்கரியில் இருந்த உணவுப் பொருட்கள்
மற்றும் இதர பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது.

உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு  வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.இதனால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து காரைக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.