தக்காளி விலை கடந்த இரண்டு வாரங்களாக கடுமையாக உயர்ந்து வருகிறது. மும்பை போன்ற நகரங்களில் தக்காளி 150 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது. ஹிமாசலப் பிரதேசம் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் ரூ.250-க்கு விற்பனையாகிறது. சாமானிய மக்கள் இதனால் தக்காளி வாங்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். இதை பயன்படுத்தி சில கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களுக்கு தக்காளியை இலவசமாக கொடுத்து, தங்கள் வியாபாரத்தை அதிகரிக்கும் வேலையில் இறங்கி இருக்கின்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள அசோக் நகரில் இயங்கிவரும் செல்போன் கடையில் ஒரு வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கடையில் உரிமையாளர் தக்காளி விலை அதிகரித்திருப்பதை, அதனை தனக்குச் சாதகமாக பயன்படுத்தி வருகிறார். அவர் தனது கடையில் மொபைல் போன், குறிப்பாக ஸ்மார்ட் போன் வாங்கினால் இரண்டு கிலோ தக்காளி இலவசம் என்று அறிவித்துள்ளார்.







