முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

உணவு முறைகளில் அரசு தலையிட எந்தச் சட்டம் அதிகாரம் தருகிறது? ப.சிதம்பரம் கேள்வி!

லட்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவர்கள் உணவு முறைகளில் அரசு தலையிடுவதற்கு எந்தச் சட்டம் அதிகாரம் தருகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மிகச் சிறிய யூனியன் பிரதேசமான லட்சத்தீவுகளின் புதிய பொறுப்பு நிர்வாக அதிகாரியாக பிரஃபுல் கோடா படேல் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய நிர்வாக நடவடிக்கைகள், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அங்கு யார் வேண்டுமானாலும், நிலம் வாங்கலாம் என்றும் மாட்டிறைச்சிக்கு தடைவிதிக்கும் விதமான முன்னெடுப்புகள், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை கலைத்தது என்பது உள்ளிட்ட விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி ட்விட்டரில் அவர், கூறியிருப்பதாவது:

குற்றங்கள் மிக மிக அரிதான லட்சத்தீவுகளில் மத்திய அரசு குண்டர் சட்டத்தை ஏன் கொண்டு வருகிறது?
அந்தத் தீவுகளில் வாழ்கின்ற சிறுபான்மைப் பிரிவு மக்களை அச்சுறுத்தும் மத்திய அரசின் நடவடிக்கைகளை வன்மையாக, நாட்டு மக்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும்.

மத்தியில் உள்ள பாஜக அரசு லடசத்தீவுகளை ஒரு காலனியைப் போல் நடத்துகிறது. அங்கு வாழும் சுமார் 70,000 மக்கள் மீது பாஜக அரசு எவ்வளவு வெறுப்பும் காழ்ப்பும் கொண்டிருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அவர்கள் உணவு முறைகளில் அரசு தலையிடுவதற்கு அரசுக்கு எந்தச் சட்டம் அதிகாரம் தருகிறது? இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

Advertisement:

Related posts

கொரோனா 2ம் அலையில் 776 மருத்துவர்கள் உயிரிழப்பு!

Halley karthi

தமிழகத்தின் 3-வது பெரிய கட்சியாக உருவெடுக்கும் நாம் தமிழர்!

பிரைவசி பாலிசியை புரிந்து கொள்ள அவகாசம் வழங்கியது வாட்ஸ் அப்!

Jayapriya