முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கு ஏப்ரல் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம், அனைத்து தரப்பு ஆவணங்களையும் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இருதரப்பு வாதங்களும் கடந்த 22ம் தேதி முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இந்த வழக்கில் கடந்த 28ம் தேதி காலை நீதிபதி கே.குமரேஷ்பாபு தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 4 இடைக்கால மனுக்களும் நிராகரிப்பட்டன.மேலும் பொதுக்குழு மற்றும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அதிமுக வழக்கில் தனிநீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓ.பி.எஸ். தரப்பினர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, இவ்வழக்கை நேரடியாக இறுதி விசாரணைக்கு எடுத்து வாதங்களை கேட்டு உத்தரவு பிறப்பிக்க அனைத்து தரப்பினருக்கும் சம்மதமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதனைத்தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு தீர்மான மேல்முறையீட்டு வழக்கில் இறுதி விசாரணைக்கு தயார் என ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட அனைத்து தரப்பும் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து ஓபிஎஸ் தரப்பில் கட்சியில் இருந்து என்னை நீக்கிய நடவடிக்கைகள் அனைத்தும் விதிகளுக்கு எதிரானது.என்னை நீக்கியது தவறு என்றால் அதன்பின் நடந்த நடைமுறைகள் மட்டுமே எப்படி சரியாகும். வழக்கு நிலுவையில் இருக்கும் போது, அவசர அவசரமாக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதனால் இடைக்கால நிவாரணம் கிடைக்கும் வகையில் வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

அப்போது ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கலைக்கபட்டுவிட்டாதா என நீதிபதிகள் கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு, தற்போது ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இல்லை. பொது செயலாளர் பதவி மட்டுமே உள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு கட்சி, தொண்டர்களை தயார்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அதை கருத்தில் கொண்டே பொது செயலாளர் தேர்தல் நடத்தபட்டது. பலமுறை ஆளும்கட்சியாகவும், தற்போது எதிர்க்கட்சியாகவும் உள்ள அதிமுக தேர்தலை திறம்பட சந்திக்க வேண்டும். அதிமுகவில் 95 சதவீதம் பேர் தனது தலைமையை ஏற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், இரண்டு தரப்பினரும் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யுங்கள் என உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 3ம் தேதி அதாவது திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram