வெற்றிமாறன் இயக்கி சூரி கதாநாயகனாக நடித்துள்ள விடுதலை பாகம் 1 இன்று வெளியாகியுள்ளது. ட்விட்டரில் விடுதலை படத்தைப் பார்த்தவர்கள் பலரும் படம் குறித்து தங்களின் விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
அசுரன் திரைப்படத்திற்குப் பின் விஜய் சேதுபதி, சூரியை வைத்து ‘விடுதலை’யை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு விடுதலை திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த, கதை முழுமையாகச் சினிமா ரசிகர்களைச் சென்றடைய வேண்டும் என்று வெற்றி மாறன் விரும்பியதால் 2 பாகங்களாக இப்படத்தை வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பல புதிய படங்களைத் தயாரித்தும், வெளியிட்டும் வருகிறது. அந்த வகையில் இந்த பாடத்தையும் இன்போடைமெண்ட் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வழங்குகிறது.
இந்நிலையில், இன்று வெளியாகவுள்ள இப்படம் குறித்து இணையத்தில் பலர் தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ட்விட்டரில் விடுதலை படத்தைப் பார்த்தவர்கள் பலரும் படம் குறித்து தங்களின் விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
அவற்றில் சிலவற்றை தற்போது பார்ப்போம்:
https://twitter.com/CinemaWithAB/status/1641687814029942784?s=20
https://twitter.com/CinemaWithAB/status/1641670220627722240?s=20
https://twitter.com/pudiharicharan/status/1641673895999578119?s=20
https://twitter.com/K_cinemaclub/status/1641673870607544321?s=20
https://twitter.com/rameshlaus/status/1641679967724666880?s=20







