நாளை மறுநாள் மேட்டூர் அணை திறப்பு: நாகையில் குறுவை சாகுபடி பணியை தொடங்கிய விவசாயிகள்..!!

நாளை மறுநாள் மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட உள்ள நிலையில் நாகையில் சூடம் ஏற்றி சூரியனை வணங்கி குறுவை சாகுபடி பணிகளை விதை நெல் தெளித்து விவசாயிகள் தொடங்கினர். நாகையில் சூடம் ஏற்றி சூரிய…

நாளை மறுநாள் மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட உள்ள நிலையில் நாகையில் சூடம் ஏற்றி சூரியனை வணங்கி குறுவை சாகுபடி பணிகளை விதை நெல் தெளித்து விவசாயிகள் தொடங்கினர்.

நாகையில் சூடம் ஏற்றி சூரிய பகவானை வணங்கி குறுவை சாகுபடி பணிகளை விதை நெல் தெளித்து விவசாயிகள் தொடங்கினர். 100க்கும் மேற்பட்ட வேளாண் கல்லூரி மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் விவசாயிகளுடன் சேர்ந்து விதை நெல் தெளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர் திறந்துவிடப்பட உள்ள
நிலையில் கடைமடை மாவட்டமான நாகை மாவட்டத்தில் விவசாய பணிகளை விவசாயிகள் துரிதப்படுத்தி வருகின்றனர். நாகை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், விவசாயிகள் தங்களது வயல்களை புழுதி அடித்து தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் மகிழ்ச்சியோடு தொடங்கி உள்ளனர். ஓர்குடி கிராமத்தில் சூடம் ஏற்றி சூரியனை வணங்கி விவசாயிகள் குறுவை விதை நெல் தெளித்து விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர்.

நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் விவசாயிகளுடன் சேர்ந்து
கீழ்வேளூர் வேளாண் கல்லூரி மாணவ மாணவிகள் விதை நெல்களை தூவி மகிழ்ந்தனர். நாகை மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகள் தொடங்கி இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.