ரஜினியின் ‘தலைவர் 173’ படத்தை இயக்கப்போவது யார்?

‘தலைவர் 173’ படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 173 என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை சுந்தர்.சி இயக்குவர் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் எதிர்பாராத காரணங்களால் விலகுவதாக தெரிவித்திருந்தார். இதற்கிடையில் ரஜினியின் புதிய படத்தை இயக்கப் போவது யார்? என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படத்தை யார் இயக்க உள்ளார் என்பது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, தலைவர் 173 படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.