திமுகவின் புதிய இணையதளம் – மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

திமுகவிற்கு புதுப்பிக்கப்பட்ட புதிய இணையதளத்தை அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திமுகவின் முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை திமுக விமர்சையாக கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக…

திமுகவிற்கு புதுப்பிக்கப்பட்ட புதிய இணையதளத்தை அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

திமுகவின் முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை திமுக விமர்சையாக கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக திமுகவின் இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுப்பிக்கப்பட்ட இணையதளம் http://www.dmk.in பயன்பாட்டை காணொலி வாயிலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின்,  இயக்க வரலாறு, அண்மை நிகழ்வுகள், நமது சாதனைகள் என இன்னும் பல தகவல் புதையல்கள் நிறைந்த, புதுப்பொலிவூட்டப்பட்ட DMK.in கழக  வலைத்தளத்தைக் கலைஞர் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இன்று தொடங்கி வைத்ததாக கூறியுள்ளார்.

அதோடு கையெழுத்துப் பிரதி இதழ்கள் முதல், கணினி வரை திமுக கடந்த வந்த நீண்ட பயணத்தைத் தலைமுறைகள் தாண்டியும் அறியச் செய்வோம் என தெரிவித்துள்ளார்.

திமுகவின் புதுப்பிக்கப்பட்ட இணையதளம் குறித்து பேசிய திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் டி ஆர் பி ராஜா, புதுப்பிக்கப்பட்ட திமுகவின் இணையதளம், கட்சியின் சாதனைகளை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில்  வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், திமுகவில் 2 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். அதோடு எதிர் அணியினர் கதறும் வகையில் திமுகவின் ஐடி விங் சிறப்பாக செயல்படுவதாகவும் டி ஆர் பி ராஜா தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.