விமர்சனத்தை சகித்துக்கொள்ள முடியாத ஒரே கட்சி பாஜக – ப.சிதம்பரம்

விமர்சனங்களை சகித்துக்கொள்ள முடியாத ஒரே கட்சி என்றால் அது பாஜக தான் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று செய்தியாளர்களை…

விமர்சனங்களை சகித்துக்கொள்ள முடியாத ஒரே கட்சி என்றால் அது பாஜக தான் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இரு பெரும் திட்டங்களை தந்திருக்கிறேன். திருமயத்தில் ரூ.2 கோடியில் நூலகம் கட்டும் திட்டம் இம்மாத இறுதிக்குள் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் பணிகள் தொடங்கப்படலாம். ஆலங்குடியில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான கட்டடம் ரூ. 1.25 கோடியில் கட்டும் திட்டத்தில் வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கும் நிலையில் இருக்கிறது. இப்பணி வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் தொடங்கப்படலாம். இவ்விரு பணிகளையும் விரைந்து மேற்கொள்ள ஆட்சியரை சந்தித்து வலியுறுத்தினேன்.

விமர்சனத்தையே சகித்துக்கொள்ள முடியாத ஒரு கட்சியின் ஆட்சியை இப்போதுதான் பார்க்கிறேன். ராகுல்காந்தி வெளிநாட்டுக்கு போய் பிரதமரை விமர்சிப்பதாக கூறுகிறார்கள். வெளிநாட்டுக்குப் போனால் மௌன விரதமா இருக்க முடியும்?

பிரதமரை விமர்சிப்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தலைவர் ஒருவர் கூறியிருக்கிறார். மத்தியில் ஆளும் பாஜகவை யாரும் தரக்குறைவாக யாரும் விமர்சிக்கவில்லை. இவர்கள் விமர்சனங்களையே பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.”

இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.