அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தாய்மண்ணின் விடுதலைக்காக ஆங்கிலேய அரசுக்கு எதிராக வீரம் செறிந்த யுத்தத்தை முன்னெடுத்து,
அடிமையாய் வாழ்வதைவிட வீரனாய் மரணம் எய்துவதே மேல் என்று தூக்குமேடை ஏறிய போதும், அனைவரது நெஞ்சங்களிலும் விடுதலை வேட்கையை விதைத்து இன்னுயிர் நீத்த மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் பிறந்தநாளில், அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







