உதகை ஆடமனையில் மக்கள் வேலை செய்யும் பகுதியில் புலி நடமாட்டம் அதிகரித்துள்ளதால் புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த ஆடமனை பகுதியில் தேயிலை தோட்டங்கள் உள்ளது. இங்குள்ள தேயிலை தோட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல தொழிலாளர்கள் பணிக்கு வந்தப்போது சுமார் பத்து வயது மதிக்கதக்க புலி ஒன்று நடந்து வந்துள்ளது.இதனால் அச்சமடைந்த தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் திரும்பி வந்துவிட்டனர்.
மேலும் புலியானது அருகிலுள்ள கால்நடையை நோக்கி வந்துள்ளது, இதனை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து சத்தம் எழுப்பினர்.இதனால் புலி அருகிலுள்ள தோட்டத்திற்குள் நுழைந்தது.வனத்துறையினர் புலியின் நடமாட்டத்தை வைத்து புலியை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
-வேந்தன்







