முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆன்லைன் சூதாட்ட மசோதா: ஆளுநர் கடிதத்துடன் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

ஆன்லைன் சூதாட்ட மசோதா ஆளுநர் திரும்பி அனுப்பிய கடிதத்துடன் தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக மக்களுக்கு தெளிப்படுத்த வேண்டும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மதுபான ஊழல் தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை காங்கிரஸ் வரவேற்று உள்ளது. காங்கிரஸ் கூட்டணி கட்சியான திமுக தனியாக கடிதம் எழுதி உள்ளது. டெல்லி மதுபான ஊழல் போல் தமிழக டாஸ்மாக் ஊழல் வழக்கு வந்து விடும் என மு.க.ஸ்டாலின் பயப்படுகிறார். இதனால் கடிதம் எழுதி உள்ளார். இந்த விவகாரத்தில் காங்கிரஸ்- திமுக அமர்ந்து பேசி ஒரு புரிதலுக்கு வர வேண்டும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படிக்கவும்: “திருப்பி அனுப்பிய சட்டமசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றினால் ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும்” – அமைச்சர் ரகுபதி

தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்கான பணிகளை செய்வது தான் எனது பணி. அதிமுகவினர் என் மீது புகார் கூறினாலும் கவலைப்பட மாட்டேன். கருணாநிதி, ஜெயலலிதா தலைவர்கள். மேஜேனர்கள் அல்ல. தலைவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். எனது பணியும் தலைவராக தான் இருக்கும்.

ஆன்லைன் சூதாட்ட மசோதாவை ஆளுநர் ஏன் திரும்பி அனுப்பினார் என்பதை வெள்ளை அறிக்கையாக அரசு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். பொது தேர்வு எழுதினால் அந்த விடை தாளை பணம் கட்டி நகலை பெறுவோம். ஆன்லைன் சூதாட்ட மசோதாவை ஏன் திருப்பி அனுப்பப்பட்டது என்ற கடிதத்துடன் வெளியிட வேண்டும்.

சட்டமன்றத்தில் மீண்டும் கூடி சட்டத்துக்குட்பட்டு மசோதாவை அனுப்ப வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக ஆளுநர் இல்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு ஆளுநர் அறிவுறுத்தியது போல் இருக்க வேண்டும் என அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது ஏன்?

EZHILARASAN D

திமுக வின் ஏமாற்று அரசியல் இனி எடுபடாது-சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்

EZHILARASAN D

கனியாமூர் வழக்கில் ஆசிரியர்கள் சிறைவாசம் அனுபவிப்பது துரதிஷ்டவசமானது – உயர் நீதிமன்றம்

Web Editor