முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“திருப்பி அனுப்பிய மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றினால் ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும்” – அமைச்சர் ரகுபதி

ஆளுநர் திருப்பி அனுப்பப்பட்ட சட்டம் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும். அதுதான் சட்டம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், அன்றைய ஆளுநர் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். மத்திய அரசும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அது நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றபோது சட்டமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என நீதிமன்றம் தள்ளுபடி செய்யவில்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சட்டம் கொண்டு வருவதற்கு சரியான தரவுகள் கூறப்படவில்லை என்று கூறி அந்த சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், இதுபோன்ற சட்டங்கள் வலுவான சட்டமாக இயற்றப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

எனவே புதிய சட்டம் கொண்டு வருவதற்கு சட்டமன்றத்திற்கு உரிமை இருக்கிறது என நீதிமன்றமே கூறி இருக்கிறது. எனவே இணையதள சூதாட்டத்திற்கு சட்டமன்றம் புதிய சட்டம் இயற்றலாம் என நீதிமன்றமே கூறியிருக்கிறது. இதனை ஆளுநர் எப்படி நிராகரித்தார் என்பது தெரியவில்லை. எனவே ஆளுநர் நிராகரித்து இருப்பதற்கு என்ன கூறியிருக்கிறார் என்பதனை அவர் அனுப்பி உள்ள கோப்புகளை பார்த்துவிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் நிச்சயமாக பதில் கூறுவார் என்று தெரிவித்தார்.

இந்த சட்டம் என்பது இது இரண்டாம் முறையாக நிராகரிக்கவில்லை. இது முதல் முறை தான். இதற்கு முன்பாக அந்த சட்டத்தின் தொடர்பான சில கேள்விகளை கேட்டு அனுப்பினர். அதன் பின்னர் நாங்கள் சட்டமன்றத்தில் இயற்றிய புதிய சட்டத்திற்கு அவர்கள் ஒப்புதல் அளித்தாக வேண்டும் மறுப்பதற்கு வாய்ப்பில்லை.

திருப்பி அனுப்பப்பட்ட சட்டம் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும். அதுதான் சட்டம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முதல்வருக்கு ஆதரவு தெரிவித்த விவசாயிகள்!

Gayathri Venkatesan

நாடு முழுவதும் ஒரேநாளில் 1,31,968 பேர் பாதிப்பு!

காலி மது பாட்டில்கள் திரும்பப்பெறும் விவகாரம்-டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Web Editor