ஆன்லைக் சூதாட்டத்தால் இதுவரை தமிழகத்தில் 18 பேர் உயிரை மாய்த்துள்ளனர். இதற்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி பாமக பொதுக்கூட்டம் திருத்தணி பழைய
கமலா தியேட்டர் பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநிலத் துணை தலைவர் டாக்டர் வைத்தியலிங்கம் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மக்களவை உறுப்பினரும், பாமகவின் தலைவருமான அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்கவும்: ஆன்லைன் சூதாட்ட மசோதா: ஆளுநர் கடிதத்துடன் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் டாஸ்மார்க் கடையை மூடும் கட்சிக்கு பெண்கள் ஓட்டு போட வேண்டும். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு வேண்டும் என்று ஒற்றுமையாக போராடினீர்கள். அதேபோல் தமிழகத்தில் டாஸ்மாக் கடையை மூட அனைவரும் ஒற்றுமையாக போராட வேண்டுட்ம. அதற்கு பாமக உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த அன்புமணி ராமதாஸ், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநரிடம் அனுப்பப்பட்டு 142 நாட்கள் ஆகிறது. தமிழக அரசிடம் சில விளக்கங்களை தமிழக ஆளுநர் கேட்டார். தற்போது இந்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். இதுவரை தமிழகத்தில் 18 பேர் ஆன்லைன் ரம்மி விளையாடி உயிரை மாய்த்து கொண்டுள்ளனர். இதற்கு ஆளுநர் பதில் சொல்ல வேண்டும். இந்த 18 உயிர்கள் போனதற்கு முழு காரணம் ஆளுநர் தான்.தமிழக அரசு உடனடியாக ஆளுநர் கேட்ட விளக்கத்தை அளித்து உடனடியாக அனுப்ப வேண்டும். ஆளுநர் இதற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த ஆன்லைன் ரம்மி வழக்கு சம்பந்தமாக பாமக வழக்கறிஞர் பாலு மூலமாக உச்ச நீதிமன்றத்தை விரைவில் நாட உள்ளோம்.
வடமாநில தொழிலாளர்களும் நமது சகோதரர்கள் தான். கடினமாக உழைப்பவர்கள். பல்வேறு வேலைகளை தமிழகத்தில் செய்து வருகிறார்கள். இதில் பல வேலைகளை தமிழ்நாட்டு இளைஞர்கள் செய்ய மறுக்கின்ற வேலைகளை வட மாநில தொழிலாளர்கள் செய்கின்றனர். வட மாநிலத் தொழிலாளர்களுக்கு நாம் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
தமிழக தலைநகர் சென்னையில் 1000 பேருந்துகள் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான
திட்டத்தினை தமிழக போக்குவரத்துறை தீட்டி இருக்கிறார்கள். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. கருணாநிதி தனியார் பேருந்துகளை அரசுடமையாக்கினார். இந்த நிலைப்பாட்டில் இருந்து வெளியில் வந்து தற்போதுள்ள திமுக அரசு, போக்குவரத்தை நாங்கள் தனியார் மயமாக்குவோம் என்பது கூறுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார்.