நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்த நாளை ஒட்டி, அவரது உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்த நாளை ஒட்டி, அவரது உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுதையொட்டி, சென்னை அடையாறில்…

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்த நாளை ஒட்டி, அவரது உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுதையொட்டி, சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள சிவாஜி கணேசனின் சிலைக்கு முதல்-அமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது புகைப்படத்திற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முதல்-அமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன், சாமிநாதன், சென்னை மேயர் பிரியா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நடிகர் பிரபு, அவரது மகன் விக்ரம் பிரபு ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். மணிமண்டபத்திற்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நடிகர் பிரபு பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தி சென்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரபு கூறியதாவது:

மூன்று வருடங்களாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து மரியாதை செலுத்தி வருகிறார். அதற்கு என் தந்தை மீது உள்ள பாசம் தான் காரணம். கருணாநிதி , எம்ஜி ஆர், சிவாஜி கணேசன் என மூவரின் சிலையும் ஒரே இடத்தில் இருப்பது அவர்களின் ஒற்றுமையை காட்டுகிறது. இவ்வாறு பிரபு கூறினார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷன், உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார். பராசக்தி திரைப்படத்தின் வாயிலாக வெள்ளித்திரையில் அறிமுகம் ஆன சிவாஜி கணேசன் தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை கட்டிப்போட்டார். இதனால் தான் அவர் மறைந்து 20 வருடங்களை கடந்த பின்னரும் அவரை தலைமுறைகள் தாண்டி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.