மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட தனியார் உடற் பயிற்சி நிலைய ஆசிரியர் மீது போலிசார் வழக்கு பதிந்து விசாரணை.
புதுச்சேரி வில்லியனூரை சேர்ந்தவர் சிவகுமார் (52), முன்னாள் ரானுவ வீரரான இவர் வடமங்களம் பகுதியில் ஒரு காலி மனையில் காவல் துறை, சிவில் சேவைகளுக்கான மற்றும் உடற் தேர்வுகான பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவரிடம் வில்லியனூர் பகுதியை சேர்ந்த லோகிதா (21) என்ற கல்லூரி மாணவி பயிற்சி எடுத்து வந்துள்ளார், அவரிடம் சிவகுமார் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டு, அவரிடம் தொலைபேசியிலும் அபாசமாக பேசி உள்ளார்.
இது குறித்து மாணவியின் தந்தை சிவசங்கரன் வில்லியனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலிசார் வழக்கு பதிவு செய்து சிவகுமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







