திமுக தலைவர் ஸ்டாலின் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

முதலமைச்சர் பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று நேரில் ஆஜராக சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே வைரவன்பட்டியில் திமுக சார்பில் நடைபெற்ற ‘உங்கள்…

முதலமைச்சர் பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று நேரில் ஆஜராக சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே வைரவன்பட்டியில் திமுக சார்பில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட அவர், தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி அதிமுக சார்பில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட குற்றவியல் அரசு வழக்கறிஞர் வழக்குப்பதிவு செய்தார். இதனை விசாரித்த நீதிபதி சுமதிசாய் பிரியா இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.