திமுக வேட்பாளர் நேர்காணலில் நிகழ்ந்த சுவாரஸ்யமான தகவல்களை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி. ஏ. மைதானத்தில் நடைபெற்றுவரும் புத்தக கண்காட்சியில் திமுகவை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் மா.சுப்பிரமணியன் எழுதிய ஓடலாம் வாங்க எனும் புத்தகத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் பாஸ்கரன் பெற்றுக்கொண்டார்
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட விருப்பம் இருப்பதாக கூறினார். திமுக வேட்பாளர் நேர்காணலின்போது, எதற்கு வந்தாய் நேராக சேப்பாக்கம் தொகுதிக்கு சென்று வேலையைப் பார் என கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியதாகவும், அதற்கு கட்சியின் தலைவர் ஸ்டாலின் என்ன சொல்வாரோ அதைத்தான் கேட்பேன் என தான் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.