முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தடுப்பூசி தட்டுபாடு இல்லை: உதயநிதி ஸ்டாலின்

தடுப்பூசி தட்டுபாடு இல்லை என்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் முன்வரவேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஆறு இடங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி மற்றும் நலத்திட்ட உதவிகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதுமான அளவிற்குத் தடுப்பூசி உள்ளது என்றும் மக்கள் தயங்காமல் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டுமென்று கூறினார். ஏழு தமிழர் விடுதலை குறித்து கேள்வி ஒன்றிற்கு பதலிளித்த உதயநிதி ஸ்டாலின் ,இது தொடர்பாக குடியரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்பபட்டுள்ளது. தமிழக முதல்வர் இவ்விஷயத்தில் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்வார் என்றார். இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித் துள்ளது பற்றி கேட்டபோது, அதற்கு தமிழக முதல்வர் பதலளிப்பார் என்றும் கூறினார்.

தட்டுபூசி தட்டுபாடுகள் இல்லை என்றும் அதை அதிகரிக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உதயநிதி தெரிவித்தார்..

Advertisement:

Related posts

சுற்றுலா வரும் பயணிகளுக்கு 100 அமெரிக்க டாலர் இலவசம்!

Jayapriya

திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்: நாராயணசாமி

Ezhilarasan

“உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா” – இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

Saravana