முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

அடுத்த 6 மாதங்களுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் அடுத்த 6 மாதங்களுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு விடும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரானா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆய்வு மேற்கொண்டார். அவருடன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சபாநாயகர் அப்பாவு ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 2 லட்சத்து 53 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தமாக 75 லட்சம் பேருக்கு தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 3 கோடி தடுப்பூசிகள் வாங்க உலகளாவிய டெண்டர் கேட்கப்பட்டுள்ளதாகவும், அவைகள் கிடைக்கப்பெற்றவுடன் அடுத்த 6 மாதங்களுக்குள் தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு விடும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

ஆட்சேபனைக்கு உரிய பதிவுகள் நீக்கம்: கூகுள், முகநூலுக்கு மத்திய அமைச்சர் பாராட்டு

Halley karthi

நாமக்கல்லில் முட்டை விலை குறைவு!

Jeba Arul Robinson

தனியார் கட்டுமான நிறுவனத்தில் 18.5கோடி ரூபாய் மோசடி!

Vandhana