மாயமான 5 வயது சிறுவன்… முட்புதரில் சடலமாக மீட்ட போலீசார்… வெளியான அதிர்ச்சி தகவல்!

ஸ்ரீபெரும்புதூரில் 5 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கருமாங்கழனி கிராமத்தில்
பீகாரைச் சேர்ந்த நீரஜ் குமார் – காஜல் குமாரி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆரவ்குமார் (வயது 5) என்ற மகன் இருந்தார். இவர் கடந்த 9 ம் தேதி காணாமல் போனதாக தெரிகிறது. இதனையடுத்து சிறுவனின் தாய்
காஜல் குமாரி ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுவனை தேடி
வந்தனர்.

இதற்கிடையே, சிறுவன் அதே கிராமத்தில் அடர்ந்த முட்புதரில் இருந்து அழுகிய
நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சிறுவன் தவறி விழுந்து, தலையில்
பலத்த காயமடைந்து உயிரிழந்து விட்டதாக போலீசார் கருதினர். பின்னர், வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்து வந்த குடியிருப்பின் முன்பு உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சிறுவனை இளைஞர் ஒருவர் அழைத்து சென்றது பதிவாகி இருந்தது.

News 7 Tamil - News7 Tamil

அதன் அடிப்படையில், அசாமைச் சேர்ந்த போல்தேவ் (22) என்பவரிடம்
சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் தீவிர விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியானது. அதன்படி, சிறுவன் ஓரினசேர்க்கைக்கு மறுத்ததால் அடர்ந்த முட்புதர்க்கு அழைத்து சென்று கல்லால் அடித்துக் கொன்றதாக போல்தேவ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அதன் பேரில் அசாமைச் சேர்ந்த போல் தேவை கைது செய்த போலீசார் மேற்கொண்டு நடத்தி  வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.