“திரைத்துறையில் உச்சம் தொட்ட திரைக்கலைஞன்…” – விஜய்க்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து!

நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கிட்டத்தட்ட ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது அவர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜன நாயகன்’ படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே, அவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். ‘ஜன நாயகன்’ படம்தான் கடைசி எனவும் அதன்பிறகு அவர் தீவிர அரசியலில் இறங்கப் போகதாகவும் சொல்லப்படுகிறது. நடிகரும், தவெக தலைவருமான விஜய் இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், விஜய்க்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்த நாள் வாழ்தது தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

“தனித்துவமிக்க நடிப்பு, ஈர்க்கும்படியான நடனம், ரசிக்கத்தக்க நகைச்சுவை, கதாபாத்திரங்களை உள்வாங்கிக் கொண்டு, உயிரோட்டமாகப் பிரதிபலிக்கும் திறன் என எல்லா ஆற்றல்களையும் வளர்த்துக்கொண்டு மக்களை மகிழ்வித்து, தமிழ்த்திரைத்துறையில் உச்சம் தொட்ட ஆகச்சிறந்த திரைக்கலைஞன்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள்”

இவ்வாறு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.