முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம்

முதல்வர் பழனிசாமி ஆட்சியில் வெயில் காலத்திலும் மழை பெய்கிறது: செல்லூர் ராஜு

எடப்பாடி பழனிசாமி முதல்வராவதற்கு மக்கள் ஒருமனதாக முடிவெடுத்துவிட்டார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடந்து முடிந்தது. மே 2ம் தேதிதான் வாக்கு எண்ணிக்கை என்பதால் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை 24 மணி நேரமும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பாதுகாத்து  வருகின்றனர். ஒருமாதமாக ஓய்வில்லாமல் பரப்புரையில்  ஈடுபட்ட அரசியல் கட்சியினர், சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் வழக்கமான பணிகளுக்கு திரும்பியுள்ளனர். 

இந்த நிலையில் மதுரையில்  இன்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது,  அதிமுகவின் வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளதாகத் தெரிவித்த அவர், அதிமுகவின் ஹீரோவான எடப்பாடி பழனிசாமிதான் டாப், மற்றவர்களெல்லாம் டூப்தான் என்றார். 

எடப்பாடி பழனிசாமி  மீண்டும் முதல்வர் ஆவதற்கு மக்கள் ஒருமனதாக முடிவெடுத்து விட்டார்கள் என்று குறிப்பிட்ட அவர், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் ஆதரவு கொண்டு அனைவராலும் ஈர்க்கப்பட்ட தலைவராக எடப்பாடி பழனிசாமி உள்ளார்,  அவர்தான், நல்லவர் வல்லவர், மேலும் ராசியானவர் என்று கூறினார்.குறிப்பாக அவரது ஆட்சி காலத்தில்தான் வெயில் காலத்திலும் மழை கொட்டுகிறது என்றும் செல்லூர் ராஜு கூறினார். 

Advertisement:
SHARE

Related posts

பதவிக்காக பணம் பெற்றால் கட்சியில் இருந்து நீக்கம்: நிர்வாகிகளுக்கு ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை!

Saravana

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ரோகித் சர்மா எப்படி? சேவாக் கணிப்பு

Gayathri Venkatesan

“தொகுதிவாரியான தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும்” – மநீம மகேந்திரன்

Saravana Kumar