ஒரு வருடத்தில் மதுரையை சிட்னியாக மாற்றுவேன்: செல்லூர் ராஜு

இன்னும் ஒரு வருடத்தில் மதுரையை சிட்னியாக மாற்றிக்காட்டுவேன் என அமைச்சர் செல்லூர் ராஜு வாக்குறுதி அளித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலில் மதுரை மேற்குத் தொகுதியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு போட்டியிடுகிறார். இதற்காக தொகுதிக்குட்பட்ட…

இன்னும் ஒரு வருடத்தில் மதுரையை சிட்னியாக மாற்றிக்காட்டுவேன் என அமைச்சர் செல்லூர் ராஜு வாக்குறுதி அளித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் மதுரை மேற்குத் தொகுதியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு போட்டியிடுகிறார். இதற்காக தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் சொக்கலிங்க நகர் பகுதியில் தேர்தல் பரப்புரையின் போது அமைச்சரும் செல்லூர் ராஜு பொதுமக்கள் மத்தியில் பேசினார்.

தன்னை பற்றி தவறாக யாரும் கூற இயலாது என்று தெரிவித்த அமைச்சர், உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் தொண்டன் எப்போதும் தவறு செய்யமாட்டேன் எனவும், வாக்களித்த மக்களுக்கு நன்றியுடன் இருப்பேன், தொகுதி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் மதுரையின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டுக் கொண்டு இருக்கிறேன் என்றும் கூறினார்.

தொடர்ந்து, என்னுடன் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் இருக்கமாட்டார்கள்,சமூக விரோதிகளுடன் தொடர்பு வைக்க மாட்டேன் எனவும் கூறிய அமைச்சர், மதுரையை சிட்னி நகரமாக மாற்றுவேன் என கூறியபோது கேலி கிண்டல் செய்தவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன், இன்னும் ஒரு வருடத்தில் சொன்னதை செய்து காட்டுவேன் என சவால் விடுத்தார். யாரும் தன்னை குற்றம் குறை கூற முடியாது என்றும் அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.