கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டத்தை அரசு கைவிடக்கூடாது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை முதல் கடலூர் வரையிலான ரயில் பாதை அமைக்கப்படும் என்றும், காரைக்குடி-கன்னியாகுமரி புதிய பாதையில் லாபம் ஈட்ட இயலாது என்பதால் அந்தத் திட்டம் கைவிடப்படுவதாக ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சென்னை – கடலூர் இடையே 178 கிலோமீட்டர் நீள ரயில்பாதை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், காரைக்குடி முதல் கன்னியாகுமரி வரை புதிதாக பாதை அமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல திருச்சி வழியாக அமைக்கப்பட்டுள்ள பாதையில் நெரிசல் நிலவி வருவதாகவும், கிழக்கு கடற்கரை ரயில் பாதை மூலம் நெரிசலை குறைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு கடற்கரை பகுதியில் ஏராளமான ஆன்மிக தலங்கள் இருப்பதாலும், தூத்துக்குடி- சென்னை இடையே அதிக எண்ணிக்கையில் துறைமுகங்கள் அமைக்கப்பட உள்ளதாலும், ரயில்பாதையின் தேவை உள்ளதாகவும் டாக்டர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.