ஜிஎஸ்டி கட்டமைப்பை மாற்றாவிட்டால் மாநிலங்களுக்குப் பாதிப்பு: நிதியமைச்சர்

மத்திய அரசு, ஜிஎஸ்டி கட்டமைப்பை மாற்றி அமைக்காவிட்டால் மாநிலங்கள் கடும் பாதிப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிதியமைச்சர், கொரோனா தடுப்பு…

மத்திய அரசு, ஜிஎஸ்டி கட்டமைப்பை மாற்றி அமைக்காவிட்டால் மாநிலங்கள் கடும் பாதிப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிதியமைச்சர், கொரோனா தடுப்பு மருந்து மற்றும் உயிர் காக்கும் கருவிகளுக்கு, ஜிஎஸ்டி கூட்டத்தில் வரி விலக்கு அளிக்கக் கோரியதாக தெரிவித்தார்.

தமிழகம் போன்ற பெரிய மாநிலங்கள் அதிகளவில் வரி பணத்தை விட்டுக் கொடுப்பதாகக் கூறிய அமைச்சர், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகை 12 ஆயிரம் கோடிக்கு மேல் உள்ளதாகக் கூறினார்.

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு என்பது முறையாக இல்லை என்று குற்றஞ்சாட்டிய அமைச்சர், ஜிஎஸ்டி கட்டமைப்பை மாற்றி அமைக்காவிட்டால் கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.