மேலூர் அருகே சூரகுண்டு கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் மற்றும் ஸ்ரீ பாப்பன்குண்டு அய்யன் கோயிலில் மகா குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சூரக்குண்டு தெற்கு வளவார்க்கு பாத்தியப்பட்ட ஸ்ரீபத்ரகாளியம்மன் மற்றும் ஸ்ரீ பாப்பன்குண்டு அய்யன் கோயில் மகா குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது. இக்கோயில் கடந்த ஒன்பதாம் தேதி செவ்வாய்க்கிழமை காலை மங்கல இசையுடன் மகாகணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் மற்றும் யாக வேள்விகள் உள்ளிட்ட நான்கு கால பூஜைகள் மூன்று நாட்கள் நடைபெற்று பதினோராம் தேதி வியாழக்கிழமை மகா பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்று அதனைத்தொடர்ந்து கருட பகவான் ஆலய கோபுரத்தின் உச்சியிலே வட்டமிட கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது.
இதில் மேலூர், சூரக்குண்டு, கல்லம்பட்டி, தெற்குத்தெரு, திருவாதவூர் உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் சிவகங்கை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு குடமுழுக்கு விழாவை கண்டுகளித்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் குடமுழுக்கு காண வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்