கிரீஸ் நாட்டின் கடலோர காவல் படையின் கப்பல் ஒன்று சியோஸ் தீவு அருகே ஏஜியன் கடலில் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது, அகதிகள் சிலரை ஏற்றி சென்ற படகு அதன் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் 14 பேர் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 26 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் 7 குழந்தைகள் மற்றும் ஒரு கர்ப்பிணி ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
அவர்களில் 2 கடலோர காவல் படை அதிகாரிகளும் அடங்குவர். படகில் எத்தனை பேர் இருந்தனர் என்ற விவரம் உடனடியாக தெரிய வரவில்லை. தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்காக ரோந்து படகுகளும், ஒரு ஹெலிகாப்டரும் மற்றும் நீச்சல் வீரர்களும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.







