இஸ்ரேலில் சிக்கித் தவித்த மேகாலயா எம்.பி. – குடும்பத்துடன் பத்திரமாக மீட்பு

இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேமில் சிக்கித் தவித்து வந்த மேகாலயா எம்.பி. வான்விராய் கர்லூகி மற்றும் அவரது குடும்பத்தினர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது…

இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேமில் சிக்கித் தவித்து வந்த மேகாலயா எம்.பி. வான்விராய் கர்லூகி மற்றும் அவரது குடும்பத்தினர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ம் தேதி காலை ராக்கெட்டுகளை வீசியும், எல்லை தாண்டியும் திடீா் தாக்குதல் நடத்தினா். இதில், 100-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியா்கள் உயிரிழந்தனா். 500-க்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்தனா்.2,500 ராக்கெட் குண்டுகள் மட்டுமே ஹமாஸ் வீசியதாகவும், அவர்கள் ஊடுருவிய 22 இடங்களில் சண்டை தொடா்வதாகவும் இஸ்ரேல் தெரிவித்தது.

இதனால் அதிா்ச்சி அடைந்த இஸ்ரேல், போா்ப் பிரகடனம் அறிவித்து நடத்திய பதிலடி தாக்குதலில் காஸா பகுதியில் 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 1,600-க்கும் மேற்பட்டோா் பலத்த காயம் அடைந்ததாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சா் தெரிவித்தாா். இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

காஸா எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சண்டை 3வது நாளாக தொடா்ந்து வருகிறது. இதனிடையே காஸாவில் வசித்து வரும் மக்கள் உடனடியாக வெளியேறும்படி இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் காஸாவுக்கு வழங்கப்படும் குடிநீர், எரிபொருள், உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை நிறுத்தப்போவதாகவும் கூறியுள்ளார். இதுவரை இருதரப்புக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை!

இந்நிலையில், புனித யாத்திரைக்காக சென்றிருந்த மேகாலயா எம்.பி. வான்விராய் கர்லூகி, அவரது குடும்பத்தினர் உட்பட உட்பட 27 பேர் ஜெருசலேமில் சிக்கித் தவித்து வந்த நிலையில், அவர்கள் அனைவரும் இஸ்ரேல் ராணுவத்தினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், எகிப்து வழியாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.