சென்னை அம்பத்தூரில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்த விற்பனை செய்த மருந்து கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
சென்னை அம்பத்தூரில் அயப்பாக்கம் அத்திப்பட்டு சாலையில் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்று ரகசிய சோதனைகள் போலீசார் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் கையில் பையுடன் வந்த நபரை நோட்டுமிட்ட போலீசார், அவரிடம் சென்று பேச்சு கொடுத்த போது அவர் வைத்திருந்த பையில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில், அவர் அத்திப்பட்டு ஐ.சி.எஃப் காலனி பகுதியை சேர்ந்த முப்பத்தெட்டு வயதான அசோகன் என்பதும், அவர் அதே பகுதியில் சக்தி மெடிக்கல் சென்ற பெயரில் மருந்து கடை நடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து மருந்து கடைக்கு சென்று சோதனை செய்த போலீசார், அங்கு தடை செய்யபட்ட வேதிபொருளை உள்ளடக்கிய சாக்கோ பிளஸ் என்ற இருமல் மருந்தை விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இருமல் இல்லாத நபர்கள் அந்த மருந்தை பயன்படுத்தும் பருகும் போது அது மதுபானத்தை விட அதிக அளவில் போதை தரக்கூடியதாக இருக்கும் என்பதால், வட மாநில வாலிபர்களும், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்களும் அந்த மருந்தை பருகி வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து 28,500 ரூபாய் மதிப்புடைய 150 இருமல் மருந்து பாட்டில்களை பறிமுதல் செய்த போலிசார், அசோகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சௌம்யா.மோ






