மயிலாடுதுறையில் வெகு விமர்சையாக நடைபெற்ற மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்

மயிலாடுதுறையில் மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது மயிலாடுதுறை அருகே கீழ் நாஞ்சில்நாடு பகுதியில் பிரசித்திப்  பெற்ற ஸ்ரீ மதுரைவீரன் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.  இக்கோவிலில் மகா…

மயிலாடுதுறையில் மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது

மயிலாடுதுறை அருகே கீழ் நாஞ்சில்நாடு பகுதியில் பிரசித்திப்  பெற்ற ஸ்ரீ மதுரைவீரன் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.  இக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதனை முன்னிட்டு கடந்த ஒன்றாம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேகப் பணிகள் துவங்கியது. இதனை அடுத்து, நான்கு கால பூஜை நிறைவுற்று மஹாபூர்ணாஹீதி மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதன் பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு மேளதாளங்கள் முழங்க கோபுரக்  கலசங்களுக்குத்  தண்ணீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து கருவறையில் உள்ள சுவாமிகளுக்குச்  சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றுத்  தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான  பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர் .

கா.ரூபி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.