முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் சினிமா

சர்வதேச திரைப்பட விழாவில் ’மாமனிதன்’ – இயக்குநர் சீனு ராமசாமி ட்வீட்

டெல்லியில் நடைபெறவுள்ள டியோராமா சர்வதேச திரைப்பட விழாவில், இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் வெளியான மாமனிதன் திரைப்படம் திரையிடப்பட உள்ளது. 

கடந்த ஜூன் மாதம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ”மாமனிதன்”. இத்திரைப்படத்தை இயக்குனர் சீனுராமசாமி இயக்கி இருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன்ஷங்கர் ராஜா மற்றும் இளையராஜா இருவரும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்திருந்தனர். இப்படம் பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மாமனிதன் திரைப்படம் வெளியானபோது பெரிதாகப் பேசப்படவில்லை. 40% பார்வையாளர்களால் மட்டுமே திரையரங்கில் பார்க்கப்பட்டது. ஆனால் ’ஆஹா’ ஓடிடி தளத்தில் வெளியான பின்னர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பலரும் படத்தைப் பார்த்துவிட்டு சமூக வலைதளங்களில் நேர்மறையான கருத்துகளைப் பதிவிட்டு வருவதால் இப்படத்தின் மீதான ஆவல் திரைரசிகர்களிடம் அதிகம் பரவி வருகிறது.

இந்நிலையில், மாமனிதன் திரைப்படம், டெல்லியில் நடைபெறவுள்ள டியோராமா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. இது குறித்த தகவலை இயக்குநர் சீனுராமசாமி, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர், ட்ரீம் கேட்சர் மற்றும் அர்பா சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டு, விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தெலங்கானாவில் விவசாயிகளுக்கும் வனத்துறையினருக்குமிடையே மோதல்

Jeba Arul Robinson

இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு தடை; காரணம் இதுதான்

EZHILARASAN D

திமுக உட்கட்சித் தேர்தல் – புதிய அறிவிப்பு வெளியீடு

EZHILARASAN D
“வாரிசு”வின் வசூல் மழை 800 கோடியை எட்டிய உலக மக்கள் தொகை நயன்தாரா மட்டுமில்லை… நீளும் பாலிவுட் பட்டியல் மழை காலத்தில் செய்யக் கூடாதவை மழைக் காலத்தில் செய்ய வேண்டியது என்ன? மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது எப்படி? உலகக் கோப்பையில் பரிசு மழை!