தமிழ்நாட்டின் போட்டி உலக நாடுகளுக்கு மத்தியில் இருக்க வேண்டும்; முதலமைச்சர்

தமிழ்நாட்டின் போட்டி என்பது இந்திய மாநிலங்களுக்கு இடையே மட்டும் இல்லாமல் உலக நாடுகளுக்கு மத்தியில் இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை, மத்திய அரசின் ஜவுளித் துறை…

தமிழ்நாட்டின் போட்டி என்பது இந்திய மாநிலங்களுக்கு இடையே மட்டும் இல்லாமல் உலக நாடுகளுக்கு மத்தியில் இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை, மத்திய அரசின் ஜவுளித் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து சென்னை மணப்பாக்கத்தில் பன்னாட்டு தொழில்நுட்ப ஜவுளிகள் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. அதில் காணொலி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாயிலாக கலந்துகொண்டார்.

அப்போது உரையாற்றிய முதலமைச்சர், “பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் நிறுவனங்களை தொடங்கும் முயற்சியில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் போட்டி என்பது இந்திய மாநிலங்களுக்கு இடையே மட்டும் இல்லாமல் உலக நாடுகளுக்கு மத்தியில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. சென்னையில் ஜவுளி நகரம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புதிய ஒருங்கிணைந்த ஜவுளி கொள்கைகள் உருவாக்கிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது” என்று விவரித்தார்.

80 விழுக்காடு கல்வி அறிவு பெற்ற திறமைமிக்க பணியாளர்களை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாகவும், வேளாண்மைக்கு அடுத்தபடியாக அதிக படியானோர்க்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.இந்திய அளவில் 12 விழுக்காடு ஜவுளி ஏற்றுமதி பங்களிப்பை தமிழ்நாடு அளிக்கிறது என குறிப்பிட்டார்.

மேலும், “6 கூட்டுறவு நூற்பாலைகளில் பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்களுக்கு மாதம் ரூ 2,500 வீதம் ஊதிய உயர்வு வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்படவுள்ளது. புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கைகள் உருவாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. விருதுநகர் மாவட்டத்தில் 1500 ஏக்கர் ஜவுளிப் பூங்கா அமைக்க சிப்காட் மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.