இலக்கியம் கட்டுரைகள் தமிழகம் பக்தி செய்திகள்

சிலந்தி வலையும் சீற்றமிகு யானையும் (திருவானைக்காவல்)


சுப்பிரமணியன்

கட்டுரையாளர்

புட்ப நந்தன், மாலியவான் இருவரும் சிவகணங்கள். சாபத்தின் காரணமாக பூமியில் ஒரே இடத்தில் பிறப்பெடுத்தனர். ஒருவர் யானையாக, மற்றொருவர் சிலந்தியாகப் பிறந்தனர். அங்கு வெண்நாவல் மரம் ஒன்றின் அடியில்,ஒரு சிவ லிங்கம் இருந்தது. யானை முன்நினைவுப் பயனாய் அருகில் உள்ள சந்திர தீர்த்தத்திலிருந்து, நீர்எடுத்து வந்து லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து கொண்டிருந்தது.

அதே மரத்திலிருந்து சிலந்தி சிவ லிங்கமேனியில் காய்ந்த இலை, சருகுகள் விழுவது கண்டு மனம் பொறுக்காது லிங்க மேனியைக் காக்க அதை சுற்றி வலை பின்னி வைப்பதும் வாடிக்கையானது.  ஒருநாள், யானையின் பொறுமை எல்லை கடந்தது, ஒரு சிலந்தியின் எச்சில் எவ்வாறு லிங்கம் மீது படலாம் என சினம் கொண்டு வலையை கிழித்தெறிந்தது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிலந்தி, கோபத்தின் எல்லைக்கே சென்று,யானையின் தும்பிக்கையின் உட்புறம் சென்று கடித்துக்குதறிவிட,வலி தாங்காது யானை தனது தும்பிக்கையை தரையில் அடிக்க, இருவருமே மரணம் அடைந்தனர்.இருவருமே சிவன் பால் அன்பும், பக்தியும் கொண்டு பிழை செய்தவர்கள் என்பதால், யானைக்கு மோட்சம் தந்து சிவகணங்களின் தலைமைப் பொறுப்பாளர் ஆக்கினார் சிவன். அந்த தலம் யானையால் காக்கப் பட்டுப் புனிதமடைந்ததால் அது”திருவானைக்காவல்”என அழைக்கப்படட்டும் என்று அருளி, சிலந்திக்கு மனிதப் பிறப்பெடுத்து தம் அடியார்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து பின் தம்மிடம் ஐக்கியமாக ஆசீர்வதித்தார்..அதன்படி சோழ சாம்ராஜ்யத்தின் பேரரசர், பிள்ளை வரம் வேண்டிய சுபதேவருக்கு, சிலந்தியை மகனாகப் பிறவி எடுக்கத் திருவுள்ளம் கொண்டார் சிவன். அரசரின் மனைவி கர்ப்பவதி ஆனதும், ஜோசியர்கள் இன்னும் சிறிது நேரம் கழித்து குழந்தை பிறந்தால் அவனை உலகமே கொண்டாடும் எனக்கூற, அரசியார் தன்னை, அந்த நேரம் வரும்வரை தலைகீழாகத் கட்டி தொங்கவிட ஆணையிட,அதன்படி செய்யப்பட்டு, நல்ல சுப வேளையில், நடராசப் பெருமானின் ஆசியுடன் ஆண் மகவு பிறந்தது‌. அதற்கு செங்கண்ணன் என்று பெயர் சூட்டினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பட்டத்தரசனாகும் போது கோச்செங்கட்சோழன் எனும் பெயர் கொண்டு,பூர்வ ஜென்ம நினைவுகளால் உந்தப்பட்டு திருவானைக்காவல் ஷேத்திரத்தை பூஜித்து வந்தார்.யானை நுழைய முடியாத அளவுக்கு குறுகிய படிக்கட்டுகளையும்,தட்டு மலைமீது சிவலிங்கத்தை யும் ஸ்தாபித்தார்.எழுபது தலங்களில் இதுபோன்ற அமைப்பில் ஆலயங்கள் கட்ட ,அவைகள்”மாடக் கோவில்கள்”என அழைக்கப்பட்டன.இதில் முதற் கோவில் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வர் ஆலயமே.


பிரும்மாண்டமான இந்த ஆலயம் 18 ஏக்கர் நிலப் பரப்பில்,4 கோபுரங்கள்,. ஐந்து பிரகாரங்களுடன்,. பல அரிய சிற்பங்களைக் கொண்டதாக விளங்குகிறது.அம்பிகை காது குண்டலங்கள் “தாடாங்கம்”எனப்படும். ஆதிசங்கரர் இதை அர்ப்பணித்தார் என்பர். அம்மைக்கு,சிவன் “சிவஞானத்தை” போதித்ததால் இதை ஒரு உபதேச தலமாக கொள்வர். சன்னதியின் அமைப்பே குருவும், மாணவியாக அம்மையும் இருப்பதால் , இங்கு சிவப் பார்வதி திருமண உற்சவம் நடப்பதில்லை.

தேவி உச்சி காலத்தில் பூஜிப்பதாக ஐதீகம்‌. ஆகவே,தினசரி, அந்த வேளையில் அர்ச்சகர் புடவை கட்டி, கீரீடம் அணிந்து,மேளதாளம் முழங்க, யானை முன்னே செல்ல அருள்மிகு ஜம்புகேஸ்வரர் சன்னதிக்கு சென்று அபிஷேகம் அனைத்தும் முடிந்த பின்னர், கோ பூஜை செய்து திரும்புவார். பஞ்ச பூத தலங்களில் இது நீர் தலம். பாடல் பெற்ற274 தலங்களில் இது 60வது.. ஒன்பது தீர்த்தங்கள் உளது.

25 பெரிய மதிற் சுவர்கள் இதில் 4வது மதிலுக்கு “திருநீற்றான் மதில்”என்று பெயர்.இதை எழுப்பிய பணியாளர்களுக்கு,சிவ பெருமானே சித்தர் உருவில் வந்து வீபூதி தர அது தங்கமாக மாறியதாக சொல்வர்.அங்குள்ள பிரகாரம் வீபூதி பிரகாரம் என அழைக்கப்படுகிறது.சித்தருக்கு பிரும்ம தீர்த்தக் கரையில் சன்னதி உள்ளதுஒன்பது துளைகள் கொண்ட கல்சன்னல் வழியாகவே இறைவனை தரிசனம் செய்ய,.நவ தீர்த்தங்களில் நீராடிய பயனும் கிடைக்கும்.இச் சந்நதியில் எப்போதும் நீர்க்கசிவு இருக்கும்.

“துன்பமின்றித் துயரின்றி என்றும் நீர்
இன்பம் வேண்டில்
இராப் பகல் ஏத்துமின்
எம்பொன் ஈசன் இறைவன் என்று உள் குவார்க்கு
அன்பன் ஆயிடும்
ஆனைக்கா அண்ணலே” என்பார் திருநாவுக்கரசர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மதுரையில் தற்காலிக கட்டிடத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி?

Halley Karthik

விசாரணை கைதி மரணம்: காவல் நிலைய ஆய்வாளர் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம்

Web Editor

“இந்தி விவகாரத்தில் இனி ஒரு உயிரையும் நாம் இழக்கக்கூடாது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Web Editor