"என்றும் 16"  ஹீரோக்கள்!

நடிச்சா ஹீரோ தான் என 60 வயதைக் கடந்தும் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் சக்ரவர்த்திகளாக வலம் வருகிறார்கள் சில நடிகர்கள்

 73 வயதைக் கடந்தும் தமன்னா, மாளவிகா மோகனன் என இந்தத் தலைமுறை நாயகிகளுடன் ஜோடி சேர்ந்து நடிந்து வருகிறார் ரஜினிகாந்த்

5 வயதில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்த பயணம் 69 வயதாகியும் ஹீரோவாகக் கலக்கி வருகிறார் கமல்ஹாசன்!

72-வது வயதில் அடியெடுத்து வைக்கும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி. கதைகளின்  நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் 

'த்ரிஷ்யம்', 'லூசிபர்' என மாஸ் படங்களில் நடித்து மலையாள திரையுலகில் முன்னணியில் இருக்கிறார் மோகன்லால். 63 வயதைக் கடந்த இவருக்கு நிறைய ரசிகர்கள் உண்டு

மகன் ராம்சரணுக்கு போட்டியாக 68 வயதைக் கடந்தும் தெலுங்கில் ஹீரோவாகக் கலக்கி வருகிறார் சிரஞ்சீவி

 64 வயதைக் கடந்தும் தெலுங்கில் மாஸ் காட்டி வருகிறார் பாலகிருஷ்ணா

 81 வயதை கடந்தும் ஹிந்தியில் ஹீரோவாக இந்தத் தலைமுறை ஹீரோக்களுக்கும் டஃப் கொடுத்து வருகிறார் அமிதாப் பச்சன்