மதுரை மண்டேலா நகர் சந்திப்பு அருகே தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாக தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது :
கண்ணகி நீதி கேட்ட இந்த மண்ணில் தமிழக மக்களின் நலனுக்காக நீதி கேட்டு வருகை தந்திருக்கின்றார் பிரதமர் மோடி. புத்தகம் கையில் இருக்க வேண்டிய மாணவர்களிடம் கஞ்சா இருக்கும் அளவிற்கு முதலமைச்சர் ஸ்டாலினின் தவறான ஆட்சி நடைபெறுகிறது.
சனாதன தர்மத்தை அழிப்போம் என்று சொன்னார் உதயநிதி ஸ்டாலின். இது ஒரு மோசமான ஆட்சி. மு.க ஸ்டாலினின் ஆட்சியில் இரண்டு வயது குழந்தை முதல் 70 வயது பெண்கள் வரை பாலியல் வன்கொடுமை செய்யப்படும் அவலம் நடைபெறுகிறது.
காற்றில் கூட ஊழல் செய்யும் கட்சி திமுக – எடப்பாடி பழனிசாமி…..!
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதற்கான ஆட்சி தான் இது. இது தர்மத்திற்கு அதர்மத்திற்கும் இடையேயான தேர்தல். இதில் தர்மம் வெல்ல வேண்டும். அதற்காக ஒருங்கிணைந்த கூட்டம் தான் இந்த தேசிய ஜனநாயக கூட்டணி. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது ;
திமுக ஆட்சியை வீழ்த்த பிரதமர் அவர்களுக்கு உறுதுணையாக அதிமுக பொதுச்செயலாளரும் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் அன்புமணி மற்றும் ஜி கே வாசன் ஆகியோரும் மக்கள் விரோத ஆட்சியை வீழ்த்த உள்ள இணைந்து இருக்கிறோம்
திமுக ஆட்சியில் எத்தனை ஊழல்கள் மறைக்கப்பட்டாலும் ஊடகங்கள் மூலமாகவே வெளியே வந்து கொண்டிருக்கின்றன. ஏழை எளிய மக்களை எப்படியாவது விலை கொடுத்து வாங்கிவிடலாம் மீண்டும் திமுக ஆட்சியை அமைத்து அந்த குடும்பத்தின் வாரிசாகிய உதயநிதி ஸ்டாலினுக்கு முடிசூட்டி விடலாம் என தமிழ்நாட்டு முதல்வர் அவர்கள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் இது இந்த களப்பிறர் ஆட்சி போன்ற இருண்ட ஆட்சி. திமுக ஆட்சியை வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். திமுக ஆட்சி முடிவுக்கு கொண்டு வருவோம் அனைவரும் ஒற்றுமையோடு 234 தொகுதிகளிலும் உழைத்திட வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.







